1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Updated: செவ்வாய், 28 மார்ச் 2023 (07:01 IST)

தொடங்கிவிட்டது கோடை.. முக்கியமாக செய்ய வேண்டியவை என்ன?

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை வெயில் கொளுத்தும் என்பதால் இந்த நேரத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நண்பர்கள் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. 
 
மேலும் தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும், நீர்ச்சத்து அதிகமாக உள்ள கம்பங்கூழ் நுங்கு ஆகியவைகளை அருந்தலாம். வெயில் காலம் முடியும் வரை சாம்பார் சாதம் சப்பாத்தி கேழ்வரகு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
 
அதேபோல் இளநீர் மோர் தயிர் தர்பூசணி நுங்கு ஆகியோவற்றையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை தவிர்த்து மண் பானையில் நீரை ஊற்றி பருகுவது சாலச்சிறந்தது. மேலும் இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம் வெயிலில் செல்பவர்கள் முகம் கழுத்து ஆகிய பகுதிகளில் கிரீன் தடவி விட்டு செல்வது நல்லது.
 
Edited by Mahendran