1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 11 dead in mumbai minister amitshah participate function

அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் 11 பேர் பலி.. வெயில் கொடுமையா?

Amitshah
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 11 பேர் பலியாகி இருப்பதாகவும் வெயில் கொடுமையால் தான் அவர்கள் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய உள்துறை அமைச்சர் மும்பையில் மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். திறந்தவெளி மைதானத்தில் காலை 11:30 மணிக்கு தொடங்கிய இந்த விழா மதியம் ஒரு மணி வரை நடந்தது. 
 
இந்த விழா நடந்து கொண்டிருந்த போது வெயில் கொடுமை அதிகமாக இருந்ததால் பலர் அவதியுடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அடுத்தடுத்து 24 பேர் வழங்கி விழுந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பொதுமக்கள் 11 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உத்தரபிரதேசமா? அல்லது என்கவுண்டர் பிரதேசமா? மாயாவதி கடும் விமர்சனம்..!