1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (07:38 IST)

13 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம்.. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று 13 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மே மாதம் பிறந்ததிலிருந்து வெயில் சுட்டரித்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் நேற்று சென்னை மதுரை உள்ளிட்ட 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்திய அளவில் வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இன்னும் வெயில் சுட்டெரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வரும் 28ஆம் தேதி உடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளதால் அதன்பின் படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva