தொடர்புடைய செய்திகள்
- இதுவரை இந்த டீம்களை ஜெயிச்சதே இல்ல..! சிக்கலில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்!
- கர்மா எப்படியும் தாக்கும்… மீண்டும் சிஎஸ்கே நிர்வாகத்தோடு ஜடேஜாவுக்கு மோதலா?
- தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரு மாதத்திற்கு முந்தைய விலையில் விற்பனை..!
- பதிரனா பற்றி தோனி சொன்னது தவறு… மலிங்கா சொல்லும் கருத்து!
- பெங்களூரில் கனமழை.. குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பலி..!
தமிழ்நாட்டில் கடும் வெயிலும் இருக்கும்.. 5 நாட்கள் மழையும் பெய்யும்... வானிலை அலெர்ட்..!
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு இடங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை முதல் மே 26 ஆம் தேதி வரை மீதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும்.
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
