செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (10:31 IST)

கஷ்டம் இன்னும் தீரல.. தனுஷ்கோடி வந்த 7 இலங்கை தமிழர்கள்!

Srilanka
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் மேலும் 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் சமீபத்தில் இலங்கையில் போராட்டம் வெடித்தது. அரசியல்வாதிகள் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கெ பதவியேற்றுள்ளார். எனினும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. எனினும் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த பலர் அங்கிருந்து கடல் வழியாக தமிழகம் நோக்கி வர தொடங்கியுள்ளனர்.

நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 இலங்கை தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை வந்தடைந்துள்ளனர். இதுவரை 80 பேர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.