திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே படகு சேவை: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

Boat
புதுச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இடையே படகு சேவை அளிக்க வேண்டும் என பல நாட்களாக இரு நாட்டின் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் புதுச்சேரி இடையே படகு சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல் இலங்கையில் உள்ள பலாலியில் இருந்து தமிழகத்தில் உள்ள திருச்சி வரையிலான விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் 
 
இதனால் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பயணம் மிகவும் எளிதாகவும் என்பது குறிப்பிடத்தக்கது