1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (09:13 IST)

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: புகார் அளிக்க எண் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: புகார் அளிக்க எண் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை அடுத்து இது குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது 
 
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த மூன்று ஆண்டுகளில் 234 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது
 
கடந்த இரண்டு மாதங்களில் தாமதமான புகார்கள் காரணமாக 13 குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் 39 குழந்தை திருமணங்கள் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்றதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளில் தான் குழந்தை திருமணம் அதிகமாக நடப்பதாக புகார் வந்துள்ளது. இதனை அடுத்து குழந்தை திருமணம் குறித்த புகார்களுக்கு ப1098 என்ற எண்ணை காவல்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது