ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (13:05 IST)

வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி! விசாரணையில் வெளியான தகவல்...

சமீபகாலமாக தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் இருப்புத்தொகையை வாடிகையாளர்கள் திருடுவதாக புகார் எழுந்தன.இதனையடுத்து போலீஸாஎ தீவிர விசாரணை மேற்கொண்டனர், இதில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது..
இந்தக் கொலையில் அவர்கள் எப்படி ஈடுபட்டார்கள் என்றால்...டெலிகாலர்ஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து பல்வேறு இடங்களில் கால்செண்டர்கள் தொடங்குகிறார்கள்.  அதன் பின்னர் வாடிக்கையாளர்களிடன் பேசி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்கள். அடுத்து பான் கார்ட், ஆதார் எண், ஏடிஎம், தகவல்களை வாக்காளர் அட்டை தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கூறுவார்கள். அந்த தகவல்களை பெற்றுகொண்டு உங்களுக்கு பணம் வரப்போகிறது என ஓடிபி எண்ணை பெற்றுக்கொண்டு மொத்த பணத்தையும் திருடுகிறார்கள். 
 
இதில் முக்கியமானது, டெலிகாலர்ஸ் பயன்படுத்திய சிம்கள், வாடிகையாளர்களின் பெயரில் வாங்கப்பட்டது ஆகும்.
 
எனவே கடன் தருகிறோம் என் யாரும் கூறினால் அதை நம்மவேண்டாம் என வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸார் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.