திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (07:44 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்!

EVKS Elangovan
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசிய போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைவேன் என்றும் அதிமுகவைச் சேர்ந்த 4 அணிகளும் போட்டி விடாமல் பாஜகவின் வேட்பாளரை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் யார் போட்டியிட்டாலும் மிக சுலபமாக திமுக கூட்டணியின் சார்பில் நான் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் காங்கிரஸ் மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva