திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (15:26 IST)

எங்களுக்கு சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும்தான் முக்கியம்: தமிழிசை

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்பதும், உலக நாயகன் என்றால் கமல்ஹாசன் என்பதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி சின்னக்குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், பாஜகவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி, உலக நாயகன் அமித்ஷா என்று கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த பேச்சுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். மேடம் தவறு திருத்தி கொள்ளுங்கள்... மோடி சூப்புர் ஸ்டார், அமித் ஷா உலக நாயகன் இது தான் மேடம் சரி போங்க மேடம் நீங்க தப்பு தப்பா சொல்லுரீங்க உங்க பேச்சி கா' என்று ஒருவரும் 'உலகம் முழுவதும் சுற்றி வருவதால் மோடி தான் உலக நாயகன், எல்லா மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து வருவதால் அமித்ஷா தான் சூப்பர் ஸ்டார் என்று ஒருவரும் கலாயத்துள்ளனர்.

மொத ஆளு பயங்கரமா பேசுவாரு, ரெண்டாவது ஆளு பயங்கரமா நடிப்பாருனு சொல்ல வாரீங்களா மேடம்' என்று ஒருவர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளார். வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தே தமிழிசையும் எச்.ராஜாவும் பேசி வருவதால் இவர்கள் இருவரும் பாஜகவில் இருக்கும் வரை தமிழகத்திற்கு நல்லதுதான் என்று ஒருவரும் கூறியுள்ளனர்.