1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:17 IST)

தமிழகம் வந்த பிரதமர் கொடுத்த பரிசுதான் ரூ.50: முக ஸ்டாலின்

நேற்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதற்கான பரிசுதான் மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என்று கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே மானியத்துடன் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது என்றும் ஏன் இந்த கொடூரம் என்றும் மக்கள் நிம்மதியாக வாழ வரிகளை குறைத்து விலகி விலை உயர்வை தடுக்க என்றும் அவர் கூறியுள்ளார் 
 
நேற்று சென்னை வந்த பிரதமர் அடுத்த நாளே தமிழக மக்கள் உள்பட இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது