வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (07:15 IST)

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள்: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் 3,501 நடமாடும்  ரேஷன் கடைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதனால் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும், நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆக.20க்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இனி ரேசன் கடைகளில் கால்கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இருக்காது