வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (20:20 IST)

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு !

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன.  இந்த மாவட்டங்களில் பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்நிலையில் அந்தந்த ஊர்கள் தமிழில் அழைக்கப்பட்டாலும் சில ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இன்றும் வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது உதாரணமாக  சென்னையில் உள்ள எழுப்பூர் ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் எழுப்பூர் என்றே அழைக்கப்படும். இதே அனைத்து ஊர்களுக்கும் பெயரை அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..