1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP replied ADMK Minister controversie

எங்களால தோத்தீங்களா..? உங்களால்தான் நாங்க தோற்றோம்! – அதிமுக முன்னாள் அமைச்சருக்கு பாஜக பதிலடி!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியால் தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பதிலடி அளிக்கும் விதமாக பாஜக கே.டி.ராகவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் தோல்வியை தழுவி எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தேர்தல் தோல்வி குறித்து இரு கட்சிகளிடையே முரண்பாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் ”பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் “உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மூன்றாவது அலையை தொடங்குமா “லாம்ப்டா” கொரோனா!? – அதிர்ச்சியில் உலக நாடுகள்!