1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (12:50 IST)

நிதித்துறை கட்டுப்பாட்டில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்: மத்திய அரசு முடிவு

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை நிதித்துறை கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கனரக தொழில் துறையின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் இனி நிதி துறை கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் அரசுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்று நிதி திரட்ட ஏதுவாக அவள் நிதித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் நடப்பாண்டில் ரூ 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஐடிபிஐ உள்பட 20 பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு கழக பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் குறிப்பாக அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக இந்த முடிவை எதிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.