செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (12:13 IST)

மேகதாதுன்னு இல்ல.. எங்கேயுமே அணைக்கட்ட விட மாட்டோம்! – துரைமுருகன் உறுதி!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன் எங்கேயும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருவது கர்நாடக – தமிழகம் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது கர்நாடகாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “அணை கட்டும் பணியை இணக்கமாக நடத்தவே தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அணை விவகாரத்தில் சட்டமும் சாதகமாகவே உள்ளது” என கூறியுள்ளார்.

எடியூரப்பா அறிக்கைக்கு பதிலளித்து பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “மேகதாதுவில் மட்டுமல்ல வேறு எங்கேயும் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அணை கட்டுவதை தடுக்க சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.