வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (12:44 IST)

கட்சியின் பெயர் விவகாரம்; மநீம வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் தவறாக விண்ணப்பம் பூர்த்தி செய்ததால் இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மநீம, சமக, ஐஜேகே கூட்டணி கட்சி போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக மநீம மொத்தம் 135 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் திருவள்ளூரில் மநீம வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மநீம வேட்பாளர் ராஜ்குமார் தவறான படிவத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளதாகவும், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் தணிகைவேல் கட்சி விவரங்களை சரியாக குறிப்பிடாததாலும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மநீம 133 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.