1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Electuon commission catch electione loot money

தமிழகத்தில் மட்டும் ரூ.217 கோடி ரொக்கம், பரிசுபொருள் பறிமுதல்! – தேர்தல் ஆணையம்!

Tamilnadu
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 19ம் தேதி வரை தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், பரிசு பொருள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி வரை மொத்தமாக ரூ.217 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 80 கோடியே 88 லட்சம் ரூபாய் பணமும், 136 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒருமையில்தான் பேசுவேன்.. கருப்போ, காவியோ என் மேல் ஒட்டாது! – கமல்ஹாசன் பேச்சு!