1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MLA sathyanarayan round up by people at Jeeva Park

பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தி.நகர் எம்.எல்.ஏ.

sathyanarayanan
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்த எம்.எல்.ஏக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயங்கி வருகின்றனர். பொதுமக்களின் கோபம் இன்னும் தீராததால் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையிலேயே பல எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.




இந்நிலையில் சென்னை  தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன் இன்று நடைபயிற்சிக்காக ஜீவா பூங்காவிற்கு சென்ற போது, அங்கு நடைபயிற்சிக்காக வந்திருந்த சுமார் 25 பேர் அவரை சுற்றி வளைத்து, சசிகலா அணியை ஏன் ஆதரித்தீர்கள் என்று கேள்வி கேட்டு திணறடித்தனர்.

மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத சத்யநாராயணன் எம்.எல்,.ஏ உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து அங்கு நடைப்பயிற்சிக்காக வந்த ஒருவர் கூறியபோது, 'ஓட்டு கேட்க எங்களது வீடு தேடி வரும் எம்எல்ஏ-க்கள், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது எங்களுடைய கருத்தை அறிந்து செயல்பட்டிருக்க வேண்டும், மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது' என்று கூறினார்.

இந்த எம்.எல்.ஏதான் மட்டன் பாயா குடுத்து மட்டையாக்கிடுறாய்ங்க’ என்று கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து கூறியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
அப்போ ஆதரவு.... இப்போ எதிர்ப்பு....ரூ.2000 நோட்டை திரும்ப பெற வேண்டும்; பாபா ராம்தேவ்