குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய மு.க ஸ்டாலின் : என்ன பெயர் தெரியுமா ?
நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக தலைவவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சூலூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பெண்கள் உற்சாகமுடன் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். அவருடன் ஏராளமானோர் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துகொண்டனர்.
இதனையடுத்து பட்டணம் பகுதிக்குச் சென்ற ஸ்டாலினை ஏராளமான மக்கள் வரவேற்றனர். அங்கு இரண்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின் பெயர் வைத்தார். ஒரு பெண் குழந்தைக்கு ‘கண்மணி’ என்றும், மற்றொரு ஆண் குழந்தைக்கு ’அன்பழகன் ’என்று பெயர் வைத்தார்.
பின்னர் மக்களிடம், அவர் இங்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் உள்ளதற்குக் காரணம் அதிமுகதான் என்று குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக அரசு தோல்வி பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது என்று தெரிவித்தார்.