1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (21:15 IST)

நெல்லை தம்பதி வீரத்திலும் அரசியல் செய்வதா? முக ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் கண்டனம்

நெல்லை அருகே ஒரு முதிய தம்பதிகளிடம் கைவரிசை காட்ட வந்த இரண்டு திருடர்களை அந்த முதிய தம்பதிகள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசி அதிர வைத்தனர். முதிய தம்பதிகளின் வீரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடர்கள் ஒரு கட்டத்தில் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.
 
 
இதுகுறித்த சிசிடிவி காட்சியை பார்த்த பல நெட்டிசன்கள், விஐபிக்கள் அந்த முதிய தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதிகளின் வீரத்தை பாராட்டி தமிழக அரசு நாளை இவர்களுக்கு வீரதீர விருது வழங்கவுள்ளது. இந்த விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வழங்கவுள்ளார்
 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துகள்! என்று கூறிவிட்டு பின்னர் தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது! என்றும் கூறி அரசியல் செய்துள்ளார். 
 
வீரச்செயல் செய்த தம்பதிகளை அடுத்த சில நாட்களிலேயே கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் தமிழக அரசை பாராட்ட மனமில்லாத முக ஸ்டாலின், இப்படி ஒரு டுவீட்டை பதிவு செய்து தனது மனதில் இருக்கும் வன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.