செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (14:24 IST)

அலேக்கா அல்வா கொடுத்ததா அதிமுக? ஸ்டாலின் கேள்வி

அதிமுக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், 
 
2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெறும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறினார்.
 
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றது என்று விமர்சித்த அதிமுக, 2 தொகுதி இடைத்தேர்தலில் அல்வா கொடுத்தா வெற்றி பெற்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அதோடு, ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதுதான் ஜனநாயக முறை. ஆனால் நாங்கள் இதை செய்தால் முதல்வருக்கு கோபம் வருகிறது என பேசியுள்ளார்.