வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (13:01 IST)

மேகதாது அணை விவகாரம் - ஸ்டாலின் டெல்லி பயணம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

 
மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்கும் என்பது உள்பட 3  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மேகதாது அணை விவகாரத்தில் 4 மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 4 தென்மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
 
ஏற்கெனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்விவகாரம் குறித்து  பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.