செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (12:47 IST)

மனசு வந்து சொத்து வரியை உயர்த்தவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டமன்ற துறை வாரி மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, சுங்க வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துவரியை குறைக்கக்கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சொத்துவரி உயர்வு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க வரி உயர்வு தேவை. சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.