1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:47 IST)

ரூ.70 கோடி மதிப்பில் நடமாடும் மருத்துவமனை!

தமிழ்நாடு முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்' இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் 389 சிகிச்சை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
ஆம்புலன்சில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை இடம்பெற்றுள்ளன.
 
தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் மற்றும் சிறு, குறு பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக மருத்துவ ஆம்புலன்ஸ்களை கொண்டு சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.