புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (15:45 IST)

சாளக்கிராம கல்லை பூஜை செய்பவர்களுக்கு என்னவெல்லாம் பலன்கள் உண்டு தெரியுமா...?

நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகின்றது. மஹாவிஷ்ணுவின் அம்சம்தான் சாளக்கிராமம்.


யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப் பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே நான் எழுந்தருள்கிறேன்.

அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும்  குடியிருப்பவன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகி ராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும்.

அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை.  இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கின்றன.

சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். சாளக்கிராமம் மிகவும் புனிதமானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நித்ய பூஜை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில் சகல செல்வங்களும் பரிபூரணமாக விருத்தியாகும்.