வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 ஜூலை 2019 (11:12 IST)

கார்ப்ரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கும் பட்ஜெட்: பாஜகவை தாக்கும் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் பெரு நிறுவனங்களுக்கு இனிப்பை வழங்கி இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்பு இந்த பட்ஜெட்டை குறித்து தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் பாராட்டுகளையும், சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லையென்றும், இது பெரு நிறுவனங்களுக்குத் தான் இனிப்பை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

பாஜக அரசின் பல கொள்கைகளை, ஃபாசிச திணிப்பு என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் அலங்கார வார்த்தைகள் தான் வழக்கம் போல் உள்ளது எனவும், மேலும் இந்த பட்ஜெட் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல நாட்களாக குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு குடிநீர் பஞ்சத்தை போக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிகை வைத்தது.

அதை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின், கடுமையான குடிநீர் பஞ்சத்தில் இருக்கும் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் மத்திய அரசை தாக்கியுள்ளார்.

மேலும் பெரு நிறுவனங்களான ரூ.250 கோடி ‘டர்ன் ஓவர்’ உள்ள கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையை ரூ.400 கோடி வரை நீட்டித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு பாஜக துணை போகிறது என்கிற பொதுவுடைமை கட்ட்சிகளின் குற்றசாட்டை வழியுறுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பெரு நிறுவனங்களுக்கு பாஜக இந்த பட்ஜெட் மூலம் இனிப்பை வழங்கியுள்ளது என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.