ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:41 IST)

விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

விவசாய கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை என்றும், அறிவிப்பு மட்டுமே வெளிவந்து உள்ளது எனவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று அவர் பேசினார். அப்போது விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்து வெளிவந்துள்ளது என்றும் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார் 
 
மேலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசுதான் அதிமுக அரசு என்றும் தேர்தலுக்காகவும் சுயநலத்திற்காகவும் கடன்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்யும் நாடகத்தை அறியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள் என்றும் அவர் கூறி உள்ளார். ஒரு மேலும் பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி குறைகள் சூழ்ந்த தமிழ்நாடாக ஆக்கி உள்ளது என்றும் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்