தொடர்புடைய செய்திகள்
- பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள்: அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்
- சேலத்து யார்க்கர் புயலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
- சமூக விரோத கும்பலை அரசு காப்பாற்றுகிறதா? செய்தியாளர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்
- தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்ற ஸ்டாலின்: என்ன முடிவா இருக்கும்??
- விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு: முக ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்!
தில்லு முல்லுகளை கவனியுங்கள்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!
வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தில்லு முல்லுகள் இருக்கிறதா என கவனிக்கும் படி ஸ்டாலின் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தற்போது தயாராகி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 என்பதும் பெண் வாக்காளர்கள் 3,09,25,603 என்பதும் மூன்றாம் பாலினத்தவர் 6,385 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் என்றும் இந்த தொகுதியில் மொத்தம் 6,55,366 வாக்காளர்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேலூர் என்றும் இந்த தொகுதியில் 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் தில்லு முல்லுகள் இருக்கிறதா என்பதை கவனமாக பாருங்கள் என திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
