1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK stalin question about Rapid kit buying

ரேபிட் கிட் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குனீங்க! – குடையும் மு.க.ஸ்டாலின்

Tamilnadu
தமிழகத்திற்கு கொரோனா சோதனைக்கான ரேபிட் கருவிகள் கிடைத்துள்ள நிலையில் அதை வாங்கியது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை பணிகளை மேற்கொள்ள ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளன. 1.25 லட்சம் ரேபிட் கருவிகள் தமிழக அரசு கேட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 14 ஆயிரம் கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றை கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசின் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் குறை இருப்பதாக கூறி வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “கொரோனா பரிசோதனைக்கு வாங்கப்பட்ட கருவிகள் எத்தனை? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டன? என்பது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல தமிழகமும் எவ்வளவு கருவிகள்? என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் உயிர்க்காக்க போராடி வரும் இந்த நிலையில் அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஊரடங்கு தேவையில்லை - தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்