நாங்க குற்றம் செய்திருந்தா கேஸ் போட வேண்டியதுதானே? – அதிமுகவுக்கு ஸ்டாலின் கேள்வி!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (14:31 IST)
திமுகவினர் ஆட்சியில் ஊழல் நடந்ததாக அதிமுக நாளேடுகளில் விளம்பரம் அளித்துள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் இன்றைய தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் திமுக மீது பலவகையான குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி அதிமுக வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் விளம்பரம் குறித்து கேள்வி எழுப்பி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “தோல்வி பயத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளை நாளிதழ்களில் 4 பக்க விளம்பரமாக அதிமுக வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது யார்? வழக்கு போட்டிருக்கலாமே? குற்றம் என்றால் நிரூபித்திருக்கலாமே? இந்தக் கேள்விகளைக் கேட்கும் தெளிவு கொண்டவர்கள்தான் தமிழக வாக்காளர்கள்.” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :