தொடர்புடைய செய்திகள்
- தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வது ஏன்?
- தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: பரபரப்பில் அரசியல் கட்சிகள்
- அமமுகவின் இன்னொரு விக்கெட் விழுந்தது: ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் யார்?
- திமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்! பிரமாண்ட விழா நடத்த திட்டம்?
- கருணாநிதி உருவ சிலையைத் திறந்துவைக்கிறாரா மம்தா???
திமுக 11.00 மணி, அதிமுக 11.30 மணி: என்ன நடக்க போகுது!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கினாலும் இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படும். நாளை முதலே வழக்கமான பணிகள் நடைபெறும். எனவே அதிகபட்சம் 10.30 மணிக்கு இன்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எந்தெந்த பிரச்சனையை எழுப்புவது, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்பட எந்தெந்த தீர்மானங்களை கொண்டு வருவது, மானியக்கோரிக்கைகளின் விவாதங்களின்போது என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது
அதேபோல் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக கொண்டு வரும் தீர்மானங்களை எப்படி தோற்கடிப்பது, திமுகவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? குறிப்பாக திமுக தண்ணீர் பிரச்சனையை பெரிதாக்கினால் அதை முறியடிப்பது எப்படி? போன்ற ஆலோசனைகள் நடைபெறவுள்ளது
இரண்டு கட்சிகளுமே நாளை முதல் நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு தயாராகவிருப்பதால் இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
