1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (09:29 IST)

கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் – ப சிதம்பரத்துக்கு செக் !

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் கட்டுப்பாட்டை மீறி நடந்த ஒன்று எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என்று பேசி திமுக – காங்கிரஸ் இடையே விரிசலை உண்டாக்கினார். இதற்கு எதிரிவினையாற்றிய திமுக திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேரு,  ‘திமுக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்’ என முழங்கினார்.

அடுத்தடுத்த நாட்களில் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இப்படி மாறி மாறி பேசியதால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், திமுக உறவு நீடிக்குமா என்ற அளவுக்கு விவாதங்கள் எழுந்தன. இந்த விஷயத்தில் திமுக வின் கே என் நேரு ‘இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் ஒரு மாவட்ட செயலாளராக என்னுடையக் கருத்தை தலைமைக்கு தெரியப்படுத்தினேன்’ என விளக்கம் அளித்தார்.

ஆனால் தான் பேசியது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத கராத்தே தியாகராகன் காங்கிரஸ் முன்னணி தலைவர் ப சிதம்பரத்தின் அறிவுரையின் பேரின் தாமதமாகத்தான்  தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் ‘மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துகளைத் தெரிவித்தேன். அது பரபரப்பாக கே என் நேரு அவர் கருத்தை வெளியிட்டார். நேரு அண்ணன் அவர் கூறியது அவருடையத் தனிப்பட்ட கருத்து எனக் கூறியுள்ளார். அதுபோல நான் கூறியது என்னுடையத் தனிப்பட்ட கருத்து. அது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானது அல்ல’ எனத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கானக் காரணம் புரியாமல் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் புரியாமல் குழம்பி வருகின்றனராம். கராத்தேவை நீக்கியிருக்கிறார்கள். கராத்தேவை சஸ்பெண்ட் செய்யும் விஷயம் தனக்கே தெரியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரியே கட்சி நிர்வாகிகளிடம் புலம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸின் கட்டுப்பாட்டை மீறி இது தலைமையால் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தனது மகனுக்காக வலுக்கட்டாயமாக் சீட் கேட்டு பெற்றதால் அவர் மீதுள்ள அதிருப்தியால் அவரது ஆதரவாளரான கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து அவரது அதிகாரத்தைக் குறைக்கும் பொருட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.