திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:55 IST)

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? எடப்பாடியார் பொளேர்

தமிழகத்திற்கு நல்லது செய்ய நிலைக்கும் கட்சிளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தேசிய கட்சிகள் கூட்டணிக்கு ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் திமுகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது.
 
நேற்று கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களும் எங்களுடன் இணையலாம் என கூறினார். இதற்கு ஸ்டாலின் எக்காரணத்திலும் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என கூறினார்.
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் எந்த கட்சி நல்லது செய்கிறதோ அந்த கட்சி மட்டுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும் என கூறினார். ஏற்கனவே தமிழக மக்கள் பலர் பாஜகவிற்கு எதிராக பேசி வரும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து மீதமிருக்கும் ஓட்டுக்கு வேட்டு வைத்துக்கொள்ளப்போகிறதா அல்லது என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.