செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (17:51 IST)

அதிமுக ஆட்சியில் சிப்காட் அறிவித்தபோது எதிர்த்தவர் முக ஸ்டாலின்: விவசாய சங்கத்தலைவர் பேட்டி..!

கடந்த அதிமுக ஆட்சியில் சிப்காட் விரிவாக்க பணிக்கு அரசாணை வெளிவந்த போது, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்வது கண்டிக்கத்தக்கது என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
செய்யாறு அருகில் சிப்காட் விரிவாக்க பனிக்காக 3,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளால் நீர் நிலம் காற்று மாசடைந்து வரும் நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்;
 
வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு சிகப்பு கம்பளம் விரித்து விடுவதால் புற்றுநோய் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தடை செய்யப்பட்ட தொழில் தொடங்க தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா?
 
கடந்த அதிமுக ஆட்சியில் சிப்காட் விரிவாக்க பணிக்கு அரசாணை வெளிவந்த போது, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் அறியாமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்தி அரசு நிலத்தை கையகப்படுத்தி கார்ப்பரேட்க்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் போராட்டம் நீர்த்துப்போகும் வகையில் தமிழ்நாடு அரசு காவல்துறையினரை பயன்படுத்தி வருகிறத என  ஈரோட்டில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
Edited by Mahendran