இன்று முதல் தெலுங்கானாவிலும் ஊரடங்கு: விதிவிலக்குகள் என்ன?

lockdown
இன்று முதல் தெலுங்கானாவிலும் ஊரடங்கு: விதிவிலக்குகள் என்ன?
siva| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:40 IST)
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கு எந்தவித தடையுமில்லை என அறிவித்துள்ளது

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தெலுங்கானா மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவிலும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதேபோல் விரைவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :