செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (09:29 IST)

என் இதயத்தில் இடியும், மின்னலும் இறங்கியது போல் உள்ளது – மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருவெல்லிக்கேணி எம்.எல்.ஏ அன்பழகனின் மறைவு இதயத்தில் இடி இறங்கியது போல உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது

இந்நிலையில் ஜெ.அன்பழகனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது! மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெ.அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக கட்சி கொடி அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்கவிடப்படும் என்றும், திமுக கூட்டங்கள் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது