திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:43 IST)

15 நாட்கள்தான் அவகாசம்; கோரிக்கைகளை தெரிவிக்க! – எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் திடீர் கடிதம்!

தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத முக்கியமான 10 பிரச்சினைகளை ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தெரிவிக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த கடிதத்தில் அவர், மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அதை நிறைவேற்றும் பொறுப்பு எம்.எல்.ஏக்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி வாரியாக 10 முக்கிய பிரச்சினைகளை வரிசைப்படுத்தி அவற்றை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.