வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (09:02 IST)

பாஜக-வை உள்ள விடக்கூடாது... ஸ்டாலின் போட்ட பக்கா ப்ளான்!!

தமிழகத்தின் சார்பில் பாஜகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் 4வது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
எனவே, வைகோ ராஜ்யசபா உறுப்பினராவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதால் திமுக தனது அடுத்தகட்ட நகர்வாக என்ஆர் இளங்கோவனை களமிறக்கியுள்ளது. இதையடுத்து மதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தி அடையக்கூடாது என வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். 
இதன் பின்னணியில் ஸ்டாலினின் திட்டம் இருக்கிறதாம். அதாவது வைகோ வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த ஒரு இடத்திற்கான தேர்தல் மட்டும் தனியாக நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் நிறுத்தப் படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. 
 
எனவே வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு தங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்கலாம் என்று கருதிய பாஜகவுக்கு எந்த வகையிலும் வாய்ப்பு அளிக்க கூடாது என ஸ்டாலின் 4வது வேட்பாளரை களமிறக்கியுள்ளார் என கூறப்படுகிறது.