செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (17:44 IST)

ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் : கனிமொழிக்கு எதிராக பாஜக தலைவர் வழக்கு !

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக   மத்தியில்  இரண்டாம்  முறையாக ஆட்சி அமைத்தது. 
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணில் இடம்பெற்ற பாஜக 5 தொகுதியில் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்தது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடியில் திமுகவைச் சேர்ந்த கனிமொழியை  எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதில் வெற்றிபெற்ற   கனிமொழி எம்பி தற்போது எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்டு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 
ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக மனுவில் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார்