1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (17:20 IST)

வாஜ்பாயையே மறந்துவிட்டதா பாஜக? மக்களவையில் டி.ஆர்.பாலு ஆவேசம்

வாஜ்பாயை பாஜக மறந்துவிட்டதாகவும், வாஜ்பாய் காலத்தில் நிறைவேற்ற திட்டமிட்டிருந்த திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்றும் திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் இன்று ஆவேசமாக பேசினார்
 
வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை என்று கூறிய டி.ஆர்.பாலு, வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர் என்றும் மக்களவையில் டி.ஆர்.பாலு பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது பேசினார்.
 
மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் தீவிரம் காட்டியதாகவும், ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை என்றும் கூறிய டி.ஆர்.பாலு, வாஜ்பாயின் கொள்கைகளை பின்பற்றும் அரசு என்று கூறிக்கொண்டிருக்கும் இன்றைய மத்திய அரசு வாஜ்பாயின் சேது சமுத்திர திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்றும் டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.
 
இந்த நிலையில் டி.ஆர்.பாலுவின் இந்த பேச்சுகுறித்து இன்றைய சட்டமன்றத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாஜலம் கூறியபோது, 'சேது சமுத்திர  திட்டத்தை கொண்டு திமுக கடலில் தூர்வாரியத்திற்கு பதில், ஏரி குளங்களை தூர்வாரி இருந்தால் தண்ணீர் பிரச்சனையே வந்திருக்காது என்று தெரிவித்தார்.