செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (10:52 IST)

சென்னையில் தீவிரமடைந்த கொரோனா! – மருத்துவ உதவிக்கு அவசர எண்கள்!

சென்னையில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவ உதவிக்கான அவசர எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை உள்பட தமிழகத்தில் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.

சென்னையில் கொரோனா கண்டறியப்பட்ட பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044-46122300 மற்றும் 044-25384520 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.