செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (13:37 IST)

தேர்தலுக்காக அல்ல தேவைகளுக்காக... எடப்பாடியார் நச் பஞ்ச்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை விமர்சிக்கும் பொருட்டு பேச துவங்கி கடைசியில் மக்களுக்காகதான் அனைத்தும் என பயங்கர டச்சிங்காக பேசியுள்ளார். 
 
சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அவர் பேசியது பின்வருமாறு, 
 
மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்குபோட்டு தடுக்க திமுக முயன்றது. அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார். ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களிடம் அதிமுக அரசு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அதிமுக அரசு திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கிறது என பேசினார். அதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காக உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இன்னும் 5 மாதங்களில் புதிய பாலங்கள் திறக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.