தொடர்புடைய செய்திகள்
- படப்பிடிப்பு தளத்தை விட்டு கார்த்திக் நரேன் வெளியேறியது ஏன்? பரிதாபகரமான காரியம்!
- அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பு? – மீண்டும் களமிறங்கும் ரஜினி?
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 2,775: பலி எவ்வளவு?
- கனமழை நீட்டிக்கும்; பலத்த காற்று வீசும்! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
- 17 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மேற்கு வாசல்; நெல்லையப்பர் கோவிலில் மக்கள் கூட்டம்!
பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறும் முதல்வர்! – தனிப்பிரிவு நடவடிக்கை!
தமிழக அரசு தலைமை செயலகத்தில் இன்று பொதுமக்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் முன்னராக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அனைத்து தொகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கு தனி பிரிவு அமைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், அவற்றை இணையம் வாயிலாக அறிந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்ஹ மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
