செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 மே 2020 (10:41 IST)

சலசலப்புக்கு திமுக என்றைக்கும் அஞ்சாது: ஸ்டாலின் பொளேர்!

ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.    
 
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    
 
சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தெரிகிறது. விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கொரோனா கால ஊழல், நிர்வாக தோல்வியை திசை திருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 
 
பொய் வழக்குகளின் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.