Waiting List-ல் தயாநிதி மாறன்: ஆர்.எஸ்.பாரதி கைதை கொண்டாடும் எச் ராஜா!!
திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா டிவிட் போட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதாவது,
பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியான செய்தியாகும். கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இது குறித்த தனது கருத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதி மாறன் in Waiting list? என பஹிவிட்டுள்ளார்.
திமுக எம்பி தயாநிதி மாறன் சமீபத்தில் தலைமைச்செயலாளர் சண்முகத்தை சந்தித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தாழ்த்தப்பட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து பாஜக, அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.