1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (13:24 IST)

தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் போகிறது: அண்ணா சிலை காவிக்கொடி விவகாரம் குறித்து முக ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் வகையில் ஈடுபட்டுவரும் செயல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது, எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெரியார், எம்ஜிஆர் சிலைகளை அடுத்து தற்போது அண்ணா சிலை மீதும் மர்ம நபர்கள் கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 
 
கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது அவர்களின் எண்ணம்.தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!