1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (07:59 IST)

புதிய கட்சி தொடங்குகிறாரா முக அழகிரி? பரபரப்பு தகவல்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி திடீர் என புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரி வேறு கட்சியில் சேராமலும் புதிய கட்சியை தொடங்காமலும் உள்ளார். இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்து தனது நீண்ட மௌனத்தை கலைத்தார். தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தன்னை விட்டு இன்னும் விலகவில்லை என்றும் கொரோனா காரணமாகத்தான் தனது ஆதரவாளர்களை தாம் சந்திக்கவில்லை என்றும் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அரசியல் ஆலோசனை செய்ய உள்ளதாகவும், இந்த ஆலோசனைக்கு பின்னர் தான் புதிய கட்சி தொடங்குவதா? அல்லது வேறு ஏதேனும் ஒரு அணிக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு முக அழகிரி பதில் அளித்தார். மேலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்