1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 மே 2018 (11:05 IST)

மிஸ் கூவாகம் - சென்னையை சேர்ந்த திருநங்கை மொபினா தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த மொபினா என்ற திருநங்கை ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
இதனைத்தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 44 திருநங்கைகள் கலந்துகொண்டனர். அவர்களில் 25 பேர் 2 வது சுற்றுக்கு தகுதிபெற்றனர். இதில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநங்கை மொபினா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார். 2-வது இடத்தை சென்னை போரூரை சேர்ந்த பிரீத்தியும், 3-வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த சுபஸ்ரீயும் பிடித்தனர்.
 
இவ்விழாவிற்கு கவிஞர் சினேகன், விமல், தீபக், சுரேஷ், வெங்கட், நடிகை கஸ்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.