செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (12:31 IST)

தனியார் மயமாகிறதா சென்னை மாநகர போக்குவரத்து கழகம்? அதிர்ச்சி அறிவிப்பு..!

சென்னையின் பொது போக்குவரத்தை உருவாக்கும் முக்கிய அங்கமான மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆவதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் இதுவரை அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளை இயக்க அரசின் திட்டம் தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து, GCC முறையில் (Gross Cost Contract) 600 மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் மூலம் இயக்க ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. மின்சாரப் பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் அரசு மேற்கொள்ளும் வகையில் இருக்கும். ஆனால், பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் போன்ற செயல்பாடுகள் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும்.
 
தகவல்களை பார்வையிட மற்றும் ஒப்பந்தப் புள்ளி படிவங்களை பதிவிறக்கம் செய்ய, https://tntenders.gov.in/, https://mtcbus.tn.gov.in/, https://tnidb.tn.gov.in/ போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஆவணங்களை https://tntenders.gov.in/nicgep/app இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
 
ஒப்பந்தப் புள்ளி படிவங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யலாம் 10.03.2025 முதல், இறுதி நாள் 03.04.2025 மாலை 4.00 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran